AIADMK candidate continued case; Judge advises lower court to approach

Advertisment

வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யும்படி மிரட்டியதாக பூம்புகார் தொகுதி அதிமுக வேட்பாளர் பவுன்ராஜ் மற்றும் டி.எஸ்.பி.யாக உள்ள அவரது மகனுக்கு எதிரான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக பஞ்சாயத்துத் தலைவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது சம்பந்தமாக உரிய நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கை முடித்துவைத்தது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்காவில் உள்ள இடக்குடி கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவரும், அதிமுக-வைச் சேர்ந்தவருமான தங்கமணி தாக்கல் செய்தஅந்த மனுவில், “பூம்புகார் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடும் எம்.எல்.ஏ., பவுன்ராஜும், கும்பகோணம் டி.எஸ்.பி.-யான அவரது மகன் பாலகிருஷ்ணுனும் தேர்தலுக்கு இரு நாட்கள் முன்பாக தனது வீட்டுக்கு வந்து, 5 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து வாக்காளர்களுக்கு வினியோகிக்கும்படி கூறியுள்ளார். அதற்கு மறுத்ததால் தன் மீது பொய் வழக்கு தொடர்வதாக மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த வழக்கும் பதிவு செய்யப்படாததால், அதிமுக வேட்பாளர் மீதும், டி.எஸ்.பி. மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும் கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு, குற்ற விசாரணை முறை சட்டப் பிரிவின் படி, மனுதாரர் முதலில் உரிய கீழமை நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தி, வழக்கை முடித்துவைத்தது.