Skip to main content

'இன்பத் தமிழ் எங்கள் உரிமைசெம் பயிருக்கு வேர்'-ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்!   

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

AR Rahman tweet!

 

டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது, "அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" எனப் பேசியிருந்தார்.

 

AR Rahman tweet!

 

மத்திய உள்துறை அமைச்சரின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புரட்சிப் பாவலர் பாரதிதாசனின் வரிகளை குறிப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார். 'தமிழுக்கும் அமுதென்று பேர்' என்ற கவிதை தொகுப்பில் வரும் 'இன்பத் தமிழ் எங்கள் உரிமைசெம் பயிருக்கு வேர்' என்ற வரியை கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் 'ழ'  கரத்தை தங்கிய பெண் தாண்டவமாட, கீழே 'தமிழணங்கு' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் 'மூப்பில்லா தமிழ் தாயே' என்ற இசை ஆல்பத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

 

சார்ந்த செய்திகள்