Skip to main content

தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி

Published on 21/12/2017 | Edited on 21/12/2017
தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி : எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி 

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 14 பேரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.ஷைனி அளித்துள்ள தீர்ப்பு ஒட்டுமொத்த தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி என்று திமுக முன்னாள் எம்எல்ஏவும், அரியலூர் மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்தார்.



இதுகுறித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் இருந்து நக்கீரன் இணைதளத்திடம் அவர் கூறியது...

இந்த தீர்ப்பு நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. ஆ.ராசாவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. திமுகவுக்கு கிடைத்த வெற்றி. மொத்தமாக தமிழகத்திற்கு கிடைத்த வெற்றி. பொய்யாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அத்தனையையும் உடைத்தெரிந்து இன்றைக்கு வெளியே வந்திருக்கிறார்.

அனைத்து ஏழை மக்களுக்கும் குறைந்த செலவில் தொலைத்தொடர்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த புரட்சிக்கரமான நடவடிக்கையை பெருமுதலாளிகள் எதிர்த்தார்கள். பெருமுதலாளிகளின் சூழ்ச்சியின் காரணமாக இந்த வழக்கு புனையப்பட்டது. இன்றைக்கு அதையெல்லாம் தூள்தூளாக்கி வெளியே வந்திருக்கிறார்.

நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்றுதான் சிஏஜி சொன்னார்கள். ஆனால் எதிர்க்கட்சியினர் அதனை ஊழல் என்று பொய்யான குற்றச்சாட்டை புனைந்து அதன் மூலமாக தேர்தல் வெற்றிக்காக திமுக மீது பழி சுமத்தினார்கள். அது அத்தனையும் இன்று பொய் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்