Skip to main content

தலைவர்கள் - நடிகர்கள் - விளையாட்டு வீரர்களின் லவ் ஜிகாத்!

Published on 01/12/2017 | Edited on 01/12/2017
தலைவர்கள் - நடிகர்கள் - விளையாட்டு வீரர்களின் லவ் ஜிகாத்!

இந்து முஸ்லிம் லவ் ஜிகாத்  என்ற பிரச்சாரம் எந்த அளவுக்கு உண்மை? 

லவ் ஜிகாத் என்றால் காதலை வைத்து புனிதப் போராம்!



இதோ பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, நடிகர்களும், விளையாட்டு வீரர்களும் கூட இத்தகைய புனிதப் போர்களை நடத்தி இருக்கிறார்கள்.

அதாவது இந்துக்கள் முஸ்லிம்களையும், முஸ்லிம்கள் இந்துக்களையும் திருமணம் செய்திருக்கிறார்கள். அந்த லிஸ்ட்டை பார்க்கலாம்.

அத்வானியின் மகள் பிரதிபா ஒரு முஸ்லிமை திருமணம் செய்துள்ளார். சுப்பிரமணியன் சுவாமி மகளின் கணவர் பெயர் சல்மான் ஹைதர், பால்தாக்கரேயின் பேத்தி முஸ்லிம் டாக்டரைத்தான் மணம் முடித்துள்ளார். பாஜக தலைவர்கள் முக்தார் அப்பாஸ் நக்வியின் மனைவி ரேனு ஷர்மா, ஷா நவாஸ் உசேன் மனைவி ரேனு ஆகியோர் முஸ்லிம்களை மணந்த இந்துப் பெண்கள்.

டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகள் லத்திகாவின் மருமகன் பெயர் சையத். இந்தி நடிகர் அமீர்கான் மனைவி பெயர் ரீனா தத்தா என்பதும் அமீர்கான் இப்போது கிரன் ராவ் என்ற இந்துப் பெண்ணுடன்தான் வாழ்கிறார் என்பது உண்மைதானே. நடிகர் ஷாருக்கானின் மனைவி பெயர் கௌரி.

கிரிக்கெட் வீரர்கள் வரிசையில் அசாருதீன் மனைவி சங்கீதா பிஜ்லானி. சபாகரீம் மனைவி ரேஷ்மி ராய், முகமது கைஃப் மனைவியின் பெயர் பூஜா யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல, விப்ரோ முதலாளி அஜிம் ப்ரேம்ஜியின் மருமகள் பெயர் அதிதி ஆகும்.

ஆக பிரபலங்கள் எல்லாம் மதம் கடந்து திருமணம் செய்துள்ளனர் என்பதே உண்மை. இதெல்லாம், லவ் ஜிகாத் தானா? அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது மற்றவர்களை ஏன் துயரப்படுத்துகிறார்களோ தெரியவில்லை.

- ஆ.சோ.

சார்ந்த செய்திகள்