Skip to main content

ஜெ.வுக்கு குழந்தை பிறந்தது உண்மைதான்

Published on 29/11/2017 | Edited on 29/11/2017
ஜெ.வுக்கு குழந்தை பிறந்தது உண்மைதான் 
- அத்தை மகள் கூறுகிறார்

ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மைதான் -  அத்தை மகள் கூறுகிறார் 

1980 ஆம் ஆண்டு சென்னை மயிலாப்பூரில் ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மைதான். எனது பெரியம்மா அவருக்கு உதவியாக இருந்தார்கள். குழந்தை பிறந்ததை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எங்களிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார் என ஜெயலலிதாவின் அத்தை மகள் லலிதா கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் பிறந்த பெண் குழந்தை இருக்கிறது என ஜெயலலிதா அரசியலுக்கு வந்தது முதல் கூறப்பட்டு வந்தது. அவர் இதுகுறித்து எவ்வித மறுப்பும் தெரிவித்தது இல்லை. ஆனால், அவருக்கு அப்படி ஒரு குழந்தை பிறக்கவில்லை என்று அதிமுகவினர் அடித்து கூறுவார்கள்.



ஆனால், ஜெயலலிதா உயிரோடு இருக்கும்போதே ப்ரியா மகாலெட்சுமி என்ற பெண் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறியிருக்கிறார். அதன்காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

2014 ஆம் ஆண்டு, ஜெயலலிதாவின் தங்கை என்று சொல்லிக்கொண்ட சைலஜா என்பவர் தனது குழந்தை அம்ருதா, ஜெயலலிதாவின் குழந்தைதான் என்று பேட்டி அளித்தார். அப்போது, தனக்கு பிறகு அம்ருதாவுக்கு ஒரு அடையாளம் வேண்டும் என்பதற்காகவே இதை வெளிப்படுத்துவதாக கூறினார். ஆனால், ஜெயலலிதா இதுபற்றி எதுவும் கூறவில்லை.

இந்நிலையில் அம்ருதா உச்சநீதிமன்றத்தில் தன்னை ஜெயலலிதாவின் மகள் என்று கூறிக்கொண்டு ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவை தோண்டியெடுத்து தனக்கு டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

ஆனால், அந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேசமயம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்யலாம் என்று அனுமதி கொடுத்திருக்கிறது. இந்நிலையில், ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதா பெங்களூருவில் தொலைக்காட்சிகளுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது...



"1980 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சென்னை மயிலாப்பூரில் குழந்தை பிறந்தது உண்மைதான். அப்போது சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்த எனது பெரியம்மா ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்தார். சில நாட்கள் கழித்து எங்களை ஜெயலலிதா அழைத்தார். தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சத்தியம் வாங்கிக்கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன்தான் அம்ருதா எங்களைப் பார்க்க வந்தார். அப்போது, தனக்கு அங்கீகாரம் கேட்டு வழக்குத் தொடரப்போவதாக கூறினார்.

ஜெயலலிதாவின் குழந்தை அம்ருதாவா என்று தெரியாது. ஆனால், சைலஜாவுக்கு குழந்தை இல்லாததால் அவளிடம் தனது குழந்தையை கொடுத்து வளர்க்கச் சொல்லியிருக்கலாம். வேறு ஆதாரம் இல்லாத நிலையில் டிஎன்ஏ சோதனை ஒன்றுதான் இதை நிரூபிக்க உதவும். அம்ருதா தனக்கு அங்கீகாரம் மட்டுமே வேண்டும் என்று கேட்கிறார். சொத்துக்களில் உரிமை கேட்க மாட்டார். அவரை யாரும் பின்னால் இருந்து இயக்குவதாக நான் நினைக்கவில்லை" என்றார் லலிதா.

சார்ந்த செய்திகள்