Skip to main content

உதவிய காங்கிரஸ்! சிக்கலில் மாட்டிய சசிகலா!

Published on 13/11/2017 | Edited on 13/11/2017
உதவிய காங்கிரஸ்! 
சிக்கலில் மாட்டிய சசிகலா!

5வது நாளாக சசிகலா உறவினர்களிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தற்பொழுது நடைப்பெற்று வரும் வருமான வரித்துறை ரெய்டில் சிக்கிய கம்பெனிகளில் பல வருமானத்திற்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கிய கம்பெனிகள். இந்த கம்பெனிகள் அனைத்தும் போலியானவை. இதில் ஊழல் பணத்தை முதலீடு செய்து அதை வெள்ளையாக்கியிருக்கிறார்கள் என சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தெளிவாக தீர்ப்பளித்தார். 

அவரது தீர்ப்பை உச்சநீதிமன்றம் சரி என ஏற்றுக்கொண்டது. உச்சநீதிமன்றம் இந்த கம்பெனிகளின் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியது. ஆனால் சித்தராமையா தலைமையிலான கர்நாடக காங்கிரஸ் அரசு, அதில் அக்கறை காட்டவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து கிட்டதட்ட 10 மாதங்கள் ஆனபிறகும், சசிகலாவின் உறவினர்கள் நடத்திய போலி கம்பெனிகள் மேல் கர்நாடக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

அதனால் அந்த கம்பெனிகள் வழக்கம்போல இயங்க ஆரம்பித்தன. அந்த கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவின் ஊழல் பணம் கைப்பற்றப்படவில்லை. இதற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வெயிட்டான தொகையை சசிகலா குடும்பம் வழங்கியது. இதனால் இப்பொழுது வருமான வரித்துறை நடத்தும் ரெய்டுகளில் இந்த கம்பெனிகள் சிக்கியுள்ளன. 

இப்பொழுது இந்த கம்பெனிகள் வாங்கும் சொத்துக்களுக்கு ஜெயலலிதா காலத்தில் கொடுக்கப்பட்ட ஊழல் பணம் பெரிதும் உதவியுள்ளது. அதனால் அந்த பணத்திற்கு உரிய கணக்கு வழக்குகளை கொடுக்க முடியாமல் சசிகலா சொந்தங்கள் திணறி வருகின்றன. ஒரு வகையில் உதவிய காங்கிரஸ், மறுவகையில் சிக்கலில் மாட்டிவிட்டது என புலம்புகிறார்கள் சசிகலா உறவினர்கள். 

-தாமோதரன் பிரகாஷ்

சார்ந்த செய்திகள்