ஆர்.கே.நகர் தொகுதியில் எடப்பாடி அரசின் எதிர்காலம்?
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எந்தக் குழப்பமும் இல்லாமல் திமுக தனது வேட்பாளரை முதன்முதலில் அறிவித்துவிட்டது.
ஆளும் அதிமுகவில் வேட்பாளர் அறிவிப்பில் மிகப்பெரிய குளறுபடி நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஇஅதிமுக என்ற பெயரையும் இரட்டை இலைச் சின்னத்தையும் ஆளும் அதிமுக பயன்படுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

ஆனாலும் இன்னமும் ஈபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என்றே தங்களுக்குள் அழைத்துக் கொள்கிறார்கள். மதுரையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஓபிஎஸ்சையும் அவருடைய அணியினரையும் ஈபிஎஸ் அணியினர் புறக்கணித்திருக்கிறார்கள். அழைப்பிதழ் இல்லை. போஸ்டரில் ஓபிஎஸ் பெயரில்லை. இதையடுத்து அணிகளுக்கு இடையே குழப்பம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில்தான் மதுசூதனனை வேட்பாளராக்க ஜெயக்குமார் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அதையடுத்து கே.பி.முனுசாமியை வேட்பாளராக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கூறி வருகிறார்கள்.
ஆட்சிமன்றக் குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யும் என்று ஆளும் அதிமுக கூறினாலும், இந்த வேட்பாளர் அறிவிப்பில் நிச்சயமாக மிகப்பெரிய பூசல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தினகரன் தலைமையிலான அணி அதிமுக அம்மா என்ற பெயரிலேயே தேர்தலை சந்திக்கப் போவதாக அந்த அணியைச் சேர்ந்த தங்கதமிழ்செல்வன் கூறியிருக்கிறார். அத்துடன் தொப்பிச் சின்னத்தையும் கேட்டு அதிலேயே தினகரன் போட்டியிடுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜகவோ, தேர்தலை எப்படி அணுகுவது என்று ஆலோசித்து வருவதாக தமிழிசை கூறியிருக்கிறார்.
ஆக, இந்தத் தொகுதியில் நடைபெறப்போகிற இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும். அந்த முடிவுகள் கட்சிகளை எந்த வகையில் பாதிக்கும்?

ஒன்றை உறதியாக சொல்லிவிடலாம். இந்த தேர்தலில் திமுக வேட்பாளர் மருதுகணேஷ் நிச்சயமாக வெற்றி பெறுவார். அதில் சந்தேகமே இல்லை.
ஆனால், இரட்டை இலையைப் பெற்ற பிறகும், தினகரனை எதிர்த்து ஆளும் அதிமுக பெறப்போகிற வாக்குச் சதவீதம்தான் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.
கடந்த தேர்தலிலேயே திமுகதான் வெற்றி பெற்றிருக்கும். ஆனால், ஓபிஎஸ் அணியைக் காட்டிலும் தினகரன் கூடுதலாக வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெறுவார் என்ற கருத்துக் கணிப்புகள்தான் பாஜகவை படாதபாடு படுத்தியது. அதன் விளைவாகத்தான் கடைசி நேரத்தில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இப்போதும், அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் மீண்டும் தேர்தலை ரத்து செய்யுமா என்பது தெரியவில்லை. ஆனால், இரட்டை இலைச் சின்னத்திற்கு மக்களிடம் உள்ள செல்வாக்கை அறிந்துகொள்ள இந்த தேர்தல் உதவும்.
ஆனால், எடப்பாடி தலைமையிலான அந்த அரசு செய்யும் கோமாளித்தனங்களுக்கும் கேலிக்கூத்துகளுக்கும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இந்த அரசை மக்கள் விரும்பவில்லை. பாஜகவையும் அவர்கள் விரும்பவில்லை என்பது உறுதி. அதேசமயம், அதிமுகவினரில் பெரும்பகுதியான தொண்டர்கள், தினகரன் உறுதிமிக்க தலைவராக செயல்படுவார் என்று நம்புகிறார்கள். ஆனால், மக்கள் மத்தியி்ல சசிகலா குடும்பத்தினர் மீது வெறுப்பை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் இந்தத் தேர்தலில் எந்த அளவுக்கு பலன் அளித்திருக்கின்றன என்பது தெரிந்துவிடும்.
எனவேதான், தினகரனை இந்தத் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்க மத்திய மாநில அரசுகள் முயற்சிக்கலாம் என்று கூறப்படுகிறது. அப்படி ஒருவேளை தினகரனை தடுத்தாலும் அது அதிமுகவினர் மத்தியில் தினகரன் மீது அனுதாபத்தையே ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.
எப்படியிருந்தாலும் இந்தத் தேர்தலில் இரட்டை இலைக்கு விழும் வாக்குகளை வைத்தே எடப்பாடி அரசின் எதிர்காலம் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்.
- ஆதனூர் சோழன்