இங்கிலாந்து வீரர்கள் போதையில் ரகளை, அணியில் இருந்து நீக்கம்
மதுபான விடுதியில் இரண்டு பேரை தாக்கிய வீடியோ வெளியானதை அடுத்து இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு இந்திய தீவுகள்-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. மூன்றாவது போட்டியை அடுத்து மதுபான விடுதிக்கு சென்ற இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹேல்ஸ் அங்கிருந்த இருவருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் இரண்டு பேரை தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை முடியும் வரை சர்வதேச போட்டிகளில் இருந்து அவர்களை வெளியேற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.