Published on 31/05/2021 | Edited on 31/05/2021

தமிழகத்தில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 2,000 கரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை மே 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் ரேஷன் அட்டை வைத்துள்ள 2 கோடிக்கும் அதிகமான பொதுமக்கள் பயனடைந்தனர். இந்த நிவாரணத்தை ஏறக்குறைய அனைவரும் வாங்கிய நிலையில், யாராவது முதல் தவணை நிவாரணத்தைப் பெறாமல் இருந்தால் ஜூன் மாதத்தில் அந்த பணத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது.