பள்ளி மாணவன் மீது தாக்குதல்: முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
தருமபுரி அடுத்த சோளக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவன் மீது கடந்த ஜூலை 31ந் தேதி மாற்று சமூகத்தை சேர்ந்த 3 மாணவர்கள் பிளேடால் தாக்குதல் நடந்தினர். தாக்குதலுக்கு உண்டான மாணவனை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்..
தருமபுரி மாவட்ட காவல் துறையில் நீண்ட காலமாக பணியாற்ற கூடிய ஒரே சமுகத்தை சேர்ந்தவர்கள் உளவு பிரிவு, லஞ்ச ஒழிப்பு பிரிவு, SB - தனிபிரிவு, Q - பிரிவு, சிபிசிஐடி உள்ளிட்ட பிரிவுகளில் 15 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருவதால் இது போன்ற தாக்குதல்களை தமிழக அரசுக்கு உரிய துறையினர் கொண்டு செல்லாமல் மூடி மறைத்து இவர்கள் உடந்தையாக இருப்பது தெரிய வருகிறது.
தமிழக முதல்வர் அவர்கள் தருமபுரியில் நீண்ட காலமாக பணியாற்ற கூடிய ஒரே சமுகத்தை சார்ந்த காவல்துறையினரை தமிழக முதல்வர் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வடிவேல்