Skip to main content

நியூட்ரினோ திட்டத்தை விஞ்ஞானிகளே எதிர்த்து வருகிறார்கள்! பிரபல விஞ்ஞானியின் கருத்து!!

Published on 11/04/2018 | Edited on 11/04/2018
vaiko


துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள போடி தொகுதியில் இருக்கும் பொட்டிபுரம், அம்பரப்பர் மலையில் நியுட்ரினோ ஆய்வுத்திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்து அதற்கான பணிகளையும் தொடங்கியது. இதற்கு அப்பகுதி மக்களோடு மாவட்ட அளவில் உள்ள மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அதோடு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவும், இத்திட்டம் இப்பகுதியில் கொண்டு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பதுடன் மட்டுமல்லாமல் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று கூறி மதுரை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்து நியுட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடையும் வாங்கினார். அதிலிருந்து கடந்த இரண்டு வருடங்களாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மீண்டும் நியுட்ரினோ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி தன் செயலாளருக்கு வலியுறுத்தி இருக்கிறார். இந்த விசயம் வைகோ காதிற்கு எட்டியதின் பேரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார் வைகோ. அதை தொடர்ந்து தான் இந்த நாசகர நியுட்ரினோ திட்டத்தை எடுத்து கடந்த 31ம் தேதி மதுரையில் நடைபயணத்தை தொடங்கிய வைகோ உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, தேனி, போடி, சின்னமனூர், போடி, பாளையம்கூடலூர் முதல் குக்கிராமங்கள் வரை வைகோ நடந்து வந்த போது அப்பகுதியில் உள்ள மாற்றுக் கட்சியினரும், பொதுமக்களும் பெருந்திரளாக நின்று ஆராத்தி எடுத்து மாலை, சால்வை போட்டு வரவேற்றனர். அவர்களிடம் நியூட்ரினோ மூலம் வரும் பாதிப்புகளை தெள்ளத்தெளிவாக விளக்கியவாறே கடந்த 10ம் தேதி கம்பம் வந்தடைந்து பத்து நாள் நடைபயணத்தை நிறைவு செய்தார் வைகோ.

அப்படி இருந்தும் கூட நியூட்ரினோ திட்டம் மூலம் வரும் பாதிப்புகளை விஞ்ஞானி மூலம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கருதிய வைகோவோ கேரளா, கொச்சியில் உள்ள பிரபல விஞ்ஞானியான பத்மநாதனை அழைத்து வந்து கம்பத்தில் இறுதியாக நடந்த பொதுக்கூட்டத்தில் பேச வைத்தார். அதில் பேசிய விஞ்ஞானி பத்மநாதனோ, இந்தியாவில் உள்ள விஞாஞானிகளும் தமிழகத்தில் உள்ள விஞ்ஞானிகளும் இத்திட்டம் வரக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துத்தான் வருகிறார்கள். இந்த நியூட்ரினோ திட்டம் வறண்ட பகுதிகளில் அமைக்க வேண்டும் ஆனால் இத்திட்டம் அமைய போகும் இந்த தேனி மாவட்டத்திலும், அதை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டத்திலயும் மக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். அதோடு முல்லைப் பெரியாறு அணை இடுக்கி அணை உள்பட 18 அணைகள் இப்பகுதியில் இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஆய்வு மையத்திற்காக அந்த அம்பரப்பர் மலையில் இரண்டு லட்சத்தில் அதிகமான வெடி பொருட்களை வைத்து பாறைகளை தகர்க்கும் போது இங்குள்ள முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணை உள்பட அனைத்து அணைகளும் உடைந்து பெரும் ஆபத்து ஏற்படும். அதோடு நியூட்ரினோ ஆய்வு மையத்தில் இருந்து வெளிவரும் தண்ணீரில் அறுபது வேதிப் பொருட்கள் கலந்து வெளியேறி வரும் அந்த தண்ணீர் நிலத்தடிக்கு போகும்போது அப்குதியில் இருக்கக்கூடிய மக்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாது. விவசாயமும், கருகி போய்விடும்.

இதெல்லாம் மத்திய அரசுக்கு நல்லலாவே தெரியும். அதுபேல் ஆய்வுகூடத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அது பூகம்பமாக மரிற தமிழகம், கேரளா மாநிலத்தையே சுடுகாடாக மாற்றிவிடும். இந்த அளவுக்கு வைகோ சொன்னதுபோல் இதுஒரு நாசகார திட்டம் தான். இப்படிப்பட்;ட திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும். என் வாழ்நாளில் பொதுக்கூட்ட மேடையில் பேசுவதே இதுதான் முதன் முறை என்று கூறினார். ஆனால் விஞ்ஞானி பத்மநாதன் ஆங்கிலத்தில் பேசியதால் அதை தமிழாக்கம் செய்ய வந்தவர் சரிவர தமிழாக்கம் செய்து சொல்ல தெரியவில்லை. உடனே மேடையில் இருந்த வைகோ தானே எழுந்து விஞ்ஞானியின் ஆங்கில பேச்சுக்கு தமிழாக்கம் செய்து அதை உணர்ச்சிப்பூர்வமாகவே கூட்டத்தில் தெளிவுபடுது;தியதை கண்டு கூட்டத்தில் இருந்த மக்களோ அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.
 

Medaiyil vaiko 1


இறுதியாக பேசிய வைகோவோ... எனது பத்து நாட்கள் நடைபயணத்தில் 200கிலோ மீட்டர் நடந்து 75 லட்சம் மக்களை சந்தித்து இந்த நாசகர திட்டத்தின் பாதிப்புகளை அந்த மக்கள் மனதில் பதமி வைத்திருக்கிறேன். அது எனக்கு போதும். அதோடு கோர்ட் மூலம் நமக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் உடனே இந்த வைகோ ஐந்து மாவட்டத்திற்கும் வேன் மூலம் இந்த நாசகர நியூட்ரினோ திட்தட்தை ஒழிக்க போராட்டத்திற்கு வரவேன் அப்போது வீட்டிற்கு ஒருவர் தயாராக இருங்கள். நம்மை வாழ வைப்பதற்காகத்தான் என் உயிர் தோழன் ரவி தீக்குளித்து தன்னை மாய்த்துக் கொண்டான். அவருடைய கனவை நிறைவேற்றி வருங்கால சந்ததிகளை வாழ வைப்போம்.

திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்தது எல்லாம் அது ஒரு குடும்பத்தில் நடக்கும் அண்ணன், தம்பி சண்டை போல் ஆனால் எதிரி வரும்போது அண்ணன், தம்பி சேர்ந்து கொள்வார்கள். இதனால் தான் இந்த மோடியை ஒழிக்க திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறேன். இந்தியாவில் உள்ள 22 ஆராய்ச்சி மையங்களில் இருந்து கொண்டு வரப்படும் அணுக்கழிவுகளை இங்கு கொட்டி நம்மை நாசமாக்க பார்க்கிறார் மோடி. அப்படிப்பட்ட ஆட்சி இத்தோடு அழிந்து போய்விடும். மே மாதம் வரை எப்படியும் தள்ளிப் போட்டு விடலாம். அதற்கு மேல் பிரச்சனை இருக்காது என்று கூறி பேச்சை முடித்துவிட்டு புறப்பட்டார் வைகோ.

இந்த நாசகர நியூட்ரினோ திட்டத்திற்கு வைகோவின் பத்து நாட்கள் நடைபயணம் அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அது கூடிய விரைவில் வெடித்து போராட்ட தீயாக மாவட்டம் முழுவதும் பரவுவதுடன் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் வெடிக்கப் போவது உறுதி!

சார்ந்த செய்திகள்