Skip to main content

பன்னாட்டு விமான முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

PM Modi inaugurated the International Airport

 

இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி தமிழகத்தில் ரூ.5000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

 

முன்னதாக ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ள பிரதமருக்கு விமான நிலையத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமரை வரவேற்றனர். மோடியின் வருகையால் சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரூ.2,467 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெர்மினல் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்த விமான முனையம் 2.36 லட்சம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான முனையத்தில் தமிழ்நாட்டு மக்களின் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. முனையத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார். எவ்வகையில் விமான முனையம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

 

தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஐஎன்எஸ் அடையாறு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்து சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்