/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ambulancee-ni_2.jpg)
கோடை விடுமுறையையொட்டி, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து உதகைக்கு தனியார் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பயணித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த வேன் மேட்டுப்பாளையம் அருகே கோத்தகிரி சாலையில் சென்று கொண்டிருந்த போது வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தக் கொடூர விபத்தால், அந்த வேனில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து உடனடியாக ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, அங்கு விரைந்த ஆம்புலன்ஸ், படுகாயமடைந்த பயணிகளை மீட்டு அருகே உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. இந்த விபத்தில் 7 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)