Published on 02/08/2021 | Edited on 02/08/2021

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இன்று தமிழக சட்டமன்ற பொன்விழா மற்றும் கலைஞரின் திருவுருவப் பட திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தின் முக்கிய கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டார்கள். இந்நிலையில், தமிழக சட்டமன்ற பொன்விழா குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, " நூறு ஆண்டுகளுக்கு முன் வகுப்புவாரி இடஒதுக்கீடு அறிமுகமான தமிழ்நாடு சட்டமன்றத்தில் சமூகநீதிக்கான குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. சமூகநீதிக்கு சோதனை வரும்போதெல்லாம் நாட்டை வழிநடத்த வேண்டிய வரலாற்றுக் கடமையை தந்தை பெரியார் காட்டிய வழியில் தொடர்ந்து செய்திடுவோம்" என்று கூறியுள்ளார்.