Skip to main content

ஜெ., மரணத்தில் மர்மம் நிறைந்துள்ளது: ஈஸ்வரன்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
ஜெ., மரணத்தில் மர்மம் நிறைந்துள்ளது: ஈஸ்வரன்

ஜெ., மரணத்தில் மர்மம் நிறைந்துள்ளது என கொங்கு நாடு தேசிய கட்சி மாநில தலைவர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் கட்சி ஆய்வு கூட்டத்திற்காக மாரண்டஅள்ளி வந்த ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தபோது,

தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெ.,வின் மரணத்தில் மர்மம் நிறைந்துள்ளது என்பது இப்போது தெள்ள தெளிவாக தமிழ்நாட்டு மக்களுக்கு தெரிந்துள்ளது. அன்று நாங்க எல்லாரும் ஜெ., உடல் நிலையை விசாரிக்க சென்றபோது தம்பிதுரையும், ஒ.பி.எஸ்-சும் ஜெ நலமாக இருந்ததாக கூறினார்கள்.

இன்று அவர்களே அன்று பொய் சொன்னோம் பொய் சொல்ல சொன்னார்கள் என்று கூறுகின்றார்கள். இதில் இருந்தே ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது என்று தெரிகின்றது.

ஜெ-வை மருத்துவமனையில் கவனித்து கொண்ட மருத்துவர்கள், கவர்னர், வெளிநாட்டு மருத்துவர்கள் வரை அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மறைந்த முதல்வருக்கு என்ன நடந்தது எப்படி அவரது உயிர் பிரிந்தது என்ற மர்மம் விலகும். இதை மத்திய அரசு நடத்த வேண்டும் என்றார்.

- வடிவேல்

சார்ந்த செய்திகள்