காந்தி சிலைக்கு தலைவர்கள் மரியாதை

காந்தி ஜெயந்தியையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலையின் கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள காந்தியின் சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கரமராஜா, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னை கோயம்பேட்டிலுள்ள தேமுதிக தலைமை கழகத்தில் இன்று (02.10.2017) காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி அவர்களது திருவுருவ படத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
படங்கள்: ஸ்டாலின், குமரேஷ்