Skip to main content

சி.பி.எம். மக்கள் சந்திப்புப் பிரச்சாரம்

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
சி.பி.எம். மக்கள் சந்திப்புப் பிரச்சாரம்



புதுக்கோட்டை, ஆக.22- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் நால்ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சாதாரண மக்கள் அவதிப்படும் வகையில் மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்துள்ள பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பைக் கண்டித்தும் நீட் தேர்வு மற்றும் நெடுவாசல், கதிராமங்கலம் பிரச்சினைகளில் தமிழக மக்களின் நலனைக் காவுகொடுக்கும் வகையில் செயல்படும் எடப்பாடி தலைமையிலான மாநில அரசைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மக்கள் சந்திப்புப் பிரச்சாரம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

அதனொரு பகுதியாக வம்பன் நால்ரோட்டில் நடைபெற்ற பிரச்சாரத்திற்கு ஏ.செந்தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினனர் எஸ்.ராஜசேகரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர், ஒன்றியச் செயலாளர் எல்.வடிவேல், மாவட்டக்குழு உறுப்பினர்கள் க.சிவக்குமார், பி.சுசீலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.ரெகுநாதன், ஆறுமுகம், பாண்டிச்செல்வி உள்ளிட்டோர் பேசினர்.

-இரா. பகத்சிங்

சார்ந்த செய்திகள்