செல்போன் வெடித்ததில் மாணவன் பலி

இதில் பலத்த தீக்காயம் அடைந்த ரஞ்சித் வலியால் துடித்தார். அவரது சத்தம் கேட்டு எழுந்த பெற்றோர், மகன் நிலைமையை பார்த்து கதறி அழுதனர். உடனடியாக மொண்டியம்மன் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு ரஞ்சித்தை பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் சோழவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரஞ்சித்தின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றிய புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.