Skip to main content

திருச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் கைது - காவல் நிலையம் முற்றுகை!

Published on 29/09/2017 | Edited on 30/09/2017
திருச்சியில் வழக்கறிஞர் சங்க தலைவர் கைது -
காவல் நிலையம் முற்றுகை!



திருச்சி வழக்கறிஞர் ராஜேந்திரகுமார் திருச்சி நீதிமன்றத்தில் தொடர்ந்து 2வது முறையாக வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திருச்சி மாநகரில் உள்ள முக்கிய ரவுடியான மண்ணச்சநல்லூர் குணா உள்ளிட்ட ரவுடிகளுக்கு வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

இதனால் திருச்சியில் உள்ள முக்கிய வழக்குகளுக்கு குற்றவாளிகளை ஒப்படைக்கும் போது வழக்கறிஞர் ராஜேந்திரகுமாருக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி கோட்டை காவல்நிலையம் எல்லை உள்பட்ட பகுதியில் மளிகைகடை வைத்திருக்கும் ஒருவரை வீடு புகுந்து ரவுடி குணாவுடன் சேர்ந்து மிரட்டிய வழக்கில் இவர் மீது அப்போதைய கோட்டை காவல் இன்ஸ் ஞானவேல் வழக்கு பதிவு செய்தனர். இதன் பிறகு திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்திற்கு பிறகு காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு அந்த வழக்குகள் எல்லாம் ரத்து செய்தனர்.

இந்த நிலையில் திருச்சி ஜங்சன் பகுதியில் உள்ள செந்தூர் ஓட்டல் இன்று அதிகாலை 5.00 மணிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டி வீசியதில் ஓட்டலில் வரவேற்பு அறையில் உள்ள சில பொருட்கள் எரிந்து நாசம் ஆகிவிட்டது.

இந்த நிலையில் ஓட்டல் முதலாளி மகேஷ் கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் சென்று எனக்கு ராஜேஸ் என்பவர் ரியல் எஸ்டேட் அறிமுகமானவர். இவர் கே.கே.நகரை சேர்ந்த பைனான்ஸியர் கருப்பை என்பவரிடம் 14 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார். இதற்காக ராஜேஸ் என்பவர் என்னிடம் சில செக்லீப், புரோநோட்டுகள் டாக்குமெண்டுகள் கொடுத்திருந்தார். ஒரு கட்டத்தில் கருப்பையாவிற்கு கொடுக்க வேண்டிய பணத்திற்கு கொடைக்கானலில் உள்ள இடத்தை கொடுத்து சரி செய்து விட்டார். ஆனால் 2017 பிப்ரவரி மாதம் முதல் 14 கோடிக்கு வட்டியை நான் கொடுக்க வேண்டும் என்று கருப்பையா என்னிடம் மிரட்டிக் கொண்டிருந்தார்.

அதற்கு இடையில் ராஜேஸ் கருப்பையாவிடம் பணம் வாங்கும் போது ராஜேஸ் கையெழுத்து போட்ட சில டாக்குமெண்டுகள் என் பாதுகாப்பிற்கா இருந்தது. அதை கொடுக்கும் படி ராஜேந்திரகுமார் வழக்கறிஞர் என் ஓட்டல் வந்து மிரட்ட ஆரம்பித்தால் கொடுக்க வில்லை என்னை இந்த ஓட்டலை தரைமட்டமாக்கி விடுவேன் என்று மிரட்டி சென்றார்.



இந்த நிலையில் இருபது நாட்களுக்கு முன்பு நீதிமன்றம் எதிரே உள்ள ராஜேந்திரகுமார் அலுவலகத்திற்கு என்னை அழைத்தனர். அங்கே சென்ற போது ராஜேஷ் மற்றும் ராஜேந்திரகுமார் இருந்தனர் அப்போது ராஜேஸ் கருப்பைாயவிற்கு கொடுக்க வேண்டிய கடனை கொடுத்து விட்டார். ஆனால் அதற்கான வட்டி 4 கோடியை நீ தான் கொடுக்க வேண்டும். இதை பிரச்சனையில்லாம் முடித்து கொடுக்க 1.50 கோடி எனக்கு கமிஷன் கொடுக்க வேண்டும் என்று காராக பேசினார்கள். நான் வட்டி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றேன்.

அதற்கு ராஜேந்திரகுமார், ராஜேஸ் இருவரும் என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள் 1 வாரம் டைம் தருகிறோம் இல்லை என்றால் உன்னை அசிங்கப்படுத்தி உன் ஓட்டலை தரைமட்டமாக்கி விடுவோம் என்று நேரிலும் போனினும் மிரட்டினார்கள். அவர்கள் சொன்னது போலவே வெடிகுண்டு போட்டு விட்டார்கள் என்று புகார் கொடுக்க விசாரணை செய்த திருச்சி டிசி சக்திவேல் புகாரில் உண்மை தன்மை இருக்கிறது என்று வெடிகுண்டு வீசியது, கொலை மிரட்டல் விட்டது உள்ளிட்ட 3 பிரிவுகளில் திருச்சி கண்டோன்மென் இன்ஸ் விஜயபாஸ்கர் வழக்கு பதிவு செய்து 3 குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ரெகானா பேகம் முன்பு ஆஜர் படுத்தினார். 15 காவல் காவலில் வைக்க உத்தரவிட்ட பின்பு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருச்சி வழக்கறிஞர் சங்க தலைவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்கிற தகவல் கேள்விப்பட்டது. திருச்சி நீதிமன்ற வழக்கறிஞர்கள் திருச்சி கண்டோன்மெண்ட காவல் நிலையத்தை மதியதிலிருந்தது 5 நேரத்திற்கு மேலாக முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். நீதிமன்றத்தில் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.

வழக்கறிஞர் சங்க தலைவர் மீது வழக்கு பதிந்து கைது நடவடிக்கையை திருச்சி காவல்துறை எடுத்திருப்பதால் இனி வரும் காலங்களில் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் – காவல்துறையின் இடையே மோதல் போக்கு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் சீனியர் வழக்கறிஞர்கள்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்