Skip to main content

மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு தொடரும் பள்ளி மாணவர்களின் போராட்டம்!

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு தொடரும் பள்ளி மாணவர்களின் போராட்டம்!



மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டு நாகை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவிகள் பேரணியாக வந்து போராட்டம் செய்தனர். மருத்துவம் படிக்கும் கனவு மத்திய அரசின் நயவஞ்சகத்தாலும், மாநில அரசின் கையாலாகாத தனத்தாலும் தகர்ந்து போனதால் மனம் உடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் செந்தூறை மாணவி அனிதா. அவரின் இறப்பிற்கு பிறகு தமிழகமே போராட்டகளமாக மாறிக்கொண்டிருக்கிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பள்ளிக்குழந்தைகளும் தாமே முன்வந்து போராட்டம் செய்ய துவங்கிவிட்டனர். அரசு அதிகாரிகளும், வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளுர் அரசு பள்ளி மாணவ,மாணவிகள் ஆயிறத்திற்கும் அதிகமானோர் வகுப்பை புறக்கனித்து அனிதாவின் இறப்பிற்கு நீதி கேட்டு பேரணியாக நடந்துவந்து போராட்டம் செய்தனர். அதேபோல் மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயில் சம்மந்தம் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பேரணியாக வந்து போராட்டம் செய்தனர்.

போராட்டத்தில் "நீட் தேர்வு குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காத மத்திய, மாநில அரசு கண்டிப்பது, மாணவி அனிதாவின் குடும்பத்திற்கு 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மாநில அரசின் கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டிப்பது" என்பன கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் செய்தனர்.

- க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்