Skip to main content

 வேம்பங்குடியில் சிவந்தி ஆதித்தனார் நினைவாக மாவட்ட அளவிலான கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் தொடங்கியது

Published on 28/04/2018 | Edited on 29/04/2018
ball

 


    கீரமங்கலம் வேம்பங்குடியில் சிவந்தி ஆதித்தனார் நினைவாக மாவட்ட அளவிலான கைப்பந்து கோடை கால பயிற்சி முகாம் தொடங்கியது. 

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் வேம்பங்குடி கைப்பந்து கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவிலான ஆண்கள், பெண்கள் பங்கேற்கும் கைப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் கைப்பந்தில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கோடை கால பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டனர்.


    தினத்தந்தி அதிபர் சிவந்;தி ஆதித்தனார் நினைவாக மாணவர்களுக்காண கோடை கால கைப்பந்து பயிற்சி முகாமை வேம்பங்குடி கலைவாணர் திடலில் நடத்த திட்டமிட்டு அதற்காண தொடக்கவிழா ஆர்எம்.நேத்திரா முத்து, தலைமையில் முன்னால் பட்டுக்கோட்டை நகரத் தலைவர் ஜவகர்பாபு, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஜ் கட்சி தலைவர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ் வரவேற்றார். 

 

    இந்த கோடை கால பயிற்சி முகாமில் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 60 மாணவர்கள் பயிற்சிக்காக கலந்து கொள்கிறார்கள். இதில் 10 மாணவிகளும் உள்ளனர். இவர்களுக்கு தொடர்ந்து மாலையில் தொடங்கி இரவு 8 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. வெளியூர் மாணவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடுகளும் செய்துள்ளனர். இவர்களுக்கு மதுரை என்.ஐ.எஸ். கோச்சர்கள் குருபிரசாத்,  பழனியப்பன், கணேசன், சென்னை பிசிக்கல் டைரக்டர் வெங்கடேசன் ஆகியோர் பயிற்சி கொடுக்கின்றனர். மேலும் சிறப்பு தமிழ்நாடு காவல் துறை கைபந்து பயிற்சியாளர் பழனியாண்டி பயிற்சி கொடுக்கிறார். முகாம் ஏற்பாடுகளை கீரமங்கலம் வேம்பங்குடி கைப்பந்து கழக நிர்வாகிகள், சிவகுருநாதன், அருள், சரவணன் மற்றும் கைப்பந்து கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 

    கோடை கால கைப்பந்து பயிற்சி முகாம் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறும் போது.. கீரமங்கலம், வேம்பங்குடி பகுதி கைப்பந்தில் மாநில அளவில் பல வீரர்களை உறுவாக்கி உள்ளது. சிவந்தி ஆதித்தனார் தொடர்ந்து விளையாட்டுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பல விளையாட்டு வீரர்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார். அதனால் தான் அவரது நினைவாக இந்த கோடைகால பயிற்சி முகாமை நடத்துகிறோம். இந்த ஆண்டும் தொடங்கும் இந்த பயிற்சி முகாம் ஒவ்வொரு கோடை விடுமுறையில் நடத்தப்படும். இந்த பயிற்சி மூலம் மாவட்ட அளவில் உள்ள சிறந்த விளையாட்டு மாணவர்களை கண்டறிந்து வெளி உலகிற்கு கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறோம் என்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

கோடை காலத்தில் அரைநாள் விடுப்பு; அதிரடி அறிவிப்பு

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
Action Notification on Half day leave during summer in telangana

நடப்பாண்டில், இந்தியாவில் கோடை காலம் வழக்கத்தை விட அனலாக தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, தெலங்கானா, ஆந்திரா, வடக்கு உள் கர்நாடகம், மராட்டியம், ஒடிசாவில் வழக்கத்தைவிட அனல் காற்று அதிக நாட்கள் வீசும் என்று கூறியிருந்தது. அதே நேரத்தில் மார்ச் மாதத்தில் சராசரி அளவான 29.9 மி.மீ.யைவிட அதிக மழை (117%) பெய்யும் என்றும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வழக்கத்தை விட அதிகபட்ச வெப்பமும், குறைந்தபட்ச வெப்பமும் அதிகமாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. 

கோடை காலத்தை ஒட்டி, பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் காக்கும் வகையில் தெலங்கானா அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. தெலங்கானா மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மாநிலத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் நலன் கருதி மாநில அரசு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது.

அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இம்மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை அரைநாள் மட்டுமே செயல்படும். அதன்படி, காலை 8:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்படும். காலை வகுப்புகள் முடிந்ததும், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும். பத்தாம் வகுப்புக்கான தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகளில்,10ஆம் வகுப்புக்கு மட்டும் மதிய வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். காலையில் தேர்வுகள் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கிய பிறகு, மதிய வகுப்புகள் தொடங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

தமிழகத்தில் 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசிதழில் வெளியீடு 

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

Gazette 25 taluk as drought affected areas in Tamil Nadu

 

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் குறைந்த மழைப் பொழிவினால் 33 சதவிதத்திற்கும் அதிகமாக பயிர்ச்சேதம் ஏற்பட்ட பகுதிகளை வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. புதுக்கோட்டை,சிவகங்கை,ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் உள்ள 25 வட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய இரு வட்டங்களும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை ஆகிய 4 வட்டங்களும், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள போகலூர், கடலாடி, கமுதி, மண்டபம், முதுகுளத்தூர், நயினார்கோவில், பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடானை ஆகிய 11 வட்டங்களும் வறட்சி பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், கடையநல்லூர், கீழப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 6 வட்டங்களும், தூத்துக்குடி  மாவட்டத்தில் உள்ள ஆள்வார்திருநகரி வட்டமும், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள  நரிக்குடி, திருச்சுழி  என இரு வட்டங்கள் என மொத்தம் 25 வட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் வேளாண் வறட்சியால் பாதிப்புக்குள்ளான பகுதிகளாக அறிவித்து தமிழக அரசு சார்பில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.