பதவியை தக்கவைத்து கொள்வதில் தான் அதிமுக அரசு ஆர்வம் காட்டுகிறது: மு.க.ஸ்டாலின்
பதவியை தக்கவைத்து கொள்வதில் தான் அதிமுக அரசு ஆர்வம் காட்டி வருகிறது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
புதிய கவர்னர் பன்வாரிலால் தன் கடமையை செய்வார் என எதிர்பார்க்கிறேன். மக்கள் வரிப்பணத்தில், எம்.ஜி.ஆரின் புகழை பரப்பும் வகையில் நூற்றாண்டு விழா நடத்தாமல், உட்கட்சி விவகாரம் பேசுவதற்கும், எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் நிகழ்ச்சியாகவும் நடைபெறுகிறது.
கடற்கரை சாலையில் இருந்த சிவாஜி சிலை பீடத்தில் கலைஞர் பெயர் இருந்ததாலேயே சிலை அகற்றப்பட்டுள்ளது, தற்போது மணிமண்டபத்தில் வைக்கும் சிலையிலும் பெயர் இல்லாதது அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்.
காய்ச்சலை கட்டுப்படுத்தாமல் ஊழல் செய்து பதவியை தக்கவைத்து கொள்வதில் தான் அதிமுக அரசு ஆர்வம் காட்டி வருகிறது. மக்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல் குறித்து அரசுக்கு கவலையில்லை. எந்த விதத்திலும் இந்த ஆட்சி நிலைக்க வாய்ப்பில்லை. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் திமுக மக்கள் பணி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.