Skip to main content

புனேவில் இருந்து மேலும் 4 லட்சம் தடுப்பூசிகள் தமிழ்நாடு வருகை!

Published on 27/07/2021 | Edited on 27/07/2021

 

fgh

 

தமிழ்நாட்டில் கரோனா தாக்கம் குறைந்துவரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் 1.95 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக, ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டிற்கு மத்திய தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 50 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது கூடுதலாக, 34 பெட்டிகளில் 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் புனேவில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாடு வந்துள்ளது. இதன் மூலம் மத்திய தொகுப்பிலிருந்து ஜூலை மாதத்திற்கு 54 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மீதமுள்ள 17 லட்சம் தடுப்பூசிகள் இன்னும் 4 நாட்களில் வருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய தொகுப்பிலிருந்து இதுவரை 2 கோடியே 2 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்