h.raja

Advertisment

போலீசார் கைது செய்யாவிட்டால் எச்.ராஜாவை நாங்களே பிடித்து போலீசில் ஒப்படைப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

விழுப்பிரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஆனால் இதுவரை அவரை தமிழக அரசு கைது செய்யவில்லை.

Advertisment

எச்.ராஜாவை போலீசார் கைது செய்யாவிட்டால் நாங்களே அவரை பிடித்து போலீசில் ஒப்படைக்கும் நிலை ஏற்படும். பாஜகவினர் சிலரை பேசவிட்டு பதட்டமான சூழ்நிலையை ஏற்படுத்துகின்றனர். பாஜகவை விமர்சிப்பவர்கள் மட்டும் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் புகார்கள் எழுகிறது. இந்த ஊழல் முறைகேடுகளை கண்டித்து விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.