இன்றைய ஆட்சியாளர்கள் 3 மாதத்தில் அரசியல் அனாதைகள் ஆவார்கள்! திவாகரன் பேட்டி
சசிகலாவின் தம்பி திவாகரன் கடந்த ஒரு மாதமாக தீவிர அரசியல்வாதியாக வலம் வரத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஜெ கொண்டு வந்த எந்த திட்டத்தையும் இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்கள் சயல்படுத்தவில்லை. நீட் தேர்வு வேண்டாம் என்ற ஜெ வின் திட்டத்திற்கு மதிப்பு கொடுக்கவில்லை. அதனால் அனிதா என்ற மாணவி உயர் பலியாகிவிட்டார். இதற்கு பொருப்பு ஏற்று எடப்பாடி அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் பதவி விலக வேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் 3 மாதத்திற்குள் அரசியல் அனாதை ஆவார்கள்.

நீட் பிரச்சணை தொடர்பாக தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு நான் போகமாட்டேன். ஆனால் எங்கள் அணி சார்பில் கலந்து கொள்வார்கள். எங்களிடம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 60 பேர் உள்ளனர். பல அமைச்சர்களும் உள்ளனர்.
எடப்படியிடம் யாரும் இல்லை என்பதை அவரே சொல்லி இருக்கிறார். எடப்பாடி தரப்பு பொதுக்குழுவையே கூட்ட முடியாது. அப்பறம் எப்படி சசிகலாவை நீக்க முடியும். எங்களிடம் மாவட்டச் செயலாளர் அதிகமாக உள்ளனர். பெரும்பாலான அமைச்சர்கள் மா.செ க்கள் தான். வெளிப்படையாக சொல்ல முடியாது. உதயகுமார் எப்பவும் இப்படித் தான் பேறார். பதவிக்காக பணத்துக்காக எதையும் செய்வார். தனபால் முதலமைசச்ர் ஆகவேண்டும்
என்பது என் ஆசை. இந்த முறை ஒரு தால்த்தப்பட்ட சமுதாயம் முதலமைசச்ர் ஆகவில்லை
என்றால் இனி எந்த காலத்திலும் ஆகமுடியாது.
டாஸ்மாக் கடையால் எத்தனை கெடுதல் என்பதை தெரிந்தே ஜெ மூடிய மதுக்கடைகளை திறந்திருக்கிறார்கள். இது சமூதாய விரோதம். மக்கள் போராடி மூடிய கடைகளை திறப்பது என்பது மக்களுக்கு செய்யும் துரோகம். ஆட்சி கலையப்பட வேண்டும் என்பது எடப்பாடி ஆட்சி. விட்டுக் கொடுத்துட்டு தொலையட்டும். ஆட்சியும், கட்சியையும் காப்பாற்ற தவறிவிட்டார். பண்ணையார் ஆட்சி இனி எடுபடாது. எதிரியாக இருந்தாலும் அவர்கள் தோலில் கை கோடனும். நிர்பயா என்ற பெண் கற்பழித்து கொல்லப்பட்டார். அவர் வட இந்திய என்பதால் போராடினாங்க. ஆனா அனிதா தமிழ்நாடு. கரையான் கட்டிய வீட்டில் கருநாகம் குடிவந்த கொன்றுவிட்டது. மருத்துவக் கல்லூரிகள் மட்டமின்றி மருத்துவர்கள், சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகள் நீட்டை எதிர்க்க. அனிதா இறப்பின் மூலம் நியாயம் கிடைக்க வேண்டும்.
-இரா.பகத்சிங்