வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 8141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் இந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திமுக தலைமையால் ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வேலூர் மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டதாக நிர்வாகிகள் கூறினர்.

Advertisment

கடந்த ஆகஸ்ட் 18ந்தேதி, வாணியம்பாடியில் நடைபெறும் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்துக்கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து இருந்தார். ஆகஸ்ட் மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் வேலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் நன்றி அறிவிப்பு கூட்டம் ஆகஸ்ட் 25ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

vellore lok sabha election winning kathir anand DMK's Thanksgiving meeting adjourned again!

தற்போது வேலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக நன்றி அறிவிப்பு நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணிகள் தடைப்பட்டுள்ளது. இந்த தகவலை திமுக தலைவருக்கு வேலூர் மாவட்ட நிர்வாகிகள் கூறினர். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25ந்தேதி நடைபெற இருந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தையும் திமுக தலைமை ரத்து செய்துள்ளது.