Skip to main content

கவர்ச்சி நடனத்துக்கு பணமழை! - வைரல் வீடியோவால் சிக்கிய காவலர்கள்

Published on 08/04/2018 | Edited on 08/04/2018

கவர்ச்சி நடனத்திற்கு பரிசாக பணமழை பொழிந்த காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

police

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் உன்னாவோ மாவட்டத்தில் உள்ளது மத்னாப்பூர் கிராமம். இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் விழா ஒன்று நடைபெற்றது. இந்த விழாவின் கடைசி நாளில் நடன நிகழ்ச்சிக்காக பாதுகாப்புப் பணியில் காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

 

வடமாநிலங்களில் இப்போதும் பொதுவெளிகளில் கவர்ச்சி நடன நிகழ்ச்சிகள் நடைபெறுவதைப் போல, அன்றும் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பாதுகாப்புப் பணிகளில் இருந்த காவலர்கள், நடன அழகிகளைக் கண்டு உற்சாகமடைந்து மேடையில் ஏறியுள்ளனர். மேலும், தங்கள் கையில் இருந்த பணத்தை நடன அழகிகள் மழைபோல கொட்டியுள்ளனர். இந்தக் காட்சிகளை கூட்டத்தில் இருந்தவர்கள் செல்போன் மூலமாக வீடியோ எடுத்து, சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். இந்த வீடியோ சில தினங்களில் வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோவில் இருக்கும் துணை ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சார்ந்த செய்திகள்