Skip to main content

"தேசியக்கொடியை சீனாவிடம் இறக்குமதி செய்தது வேதனை அளிக்கிறது"- சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

"It is painful that the national flag was imported from China"- speaker Appavu

 

இந்திய நாட்டின் தேசியக்கொடியைக்கூட சீனாவிலிருந்து இறக்குமதி செய்வது வேதனை அளிக்கிறது எனத் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கூறியுள்ளார். 

 

கனடாவில் ஹாலிபெக்ஸ் நகரில் 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாடு நடைபெற்றது. மாநாடு நடைபெற்ற வளாகத்தில், கலந்து கொண்ட சபாநாயகர்கள் தங்கள் நாடுகளின் கொடிகளை ஏந்திக்கொண்டு  பேரணியாக வந்தனர். அதில் இந்தியா சார்பில் பங்கேற்றவர்கள் ஏந்தி வந்த கொடிகளில் மேட் இன் சீனா என அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. 

 

இந்நிலையில் கனடாவிலிருந்து சென்னைக்கு இன்று திரும்பியபொழுது சென்னை விமான நிலையத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர் "இந்தியத் தேசியக்கொடியை   சீனாவில் தயாரித்து அதை நாடாளுமன்ற சபாநாயகர்களும் தமிழகத்தில் இருந்து கனடாவிற்கு சென்ற சபாநாயகர்களும் கைகளில் ஏந்திச் சென்றது எல்லோருக்கும் வேதனையான விஷயம் தான்" என கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனக்கு மூன்று முறை அழைப்பு வந்தது..” - சபாநாயகர் அப்பாவு

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

“I got a call three times..” - Speaker Appavu

 

அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் நேற்று திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் 15 மணி நேர விசாரணையும், அவர் பணிபுரிந்து வந்த மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 13 மணி நேர சோதனையும் நிறைவடைந்து இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, “அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட ஒன்றிய அரசின் நிறுவனங்கள், ஒன்றிய அரசின் மனநிலையை புரிந்துகொண்டு பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர்களை குறிவைத்து அவர்களுக்கு எல்லாம் முதலில் நூல் விடுவது. நூல் விடுவது என்றால், ‘உங்கள் மீது இப்படி எல்லாம் பிரச்சனை இருக்கு. எனக்கு வேண்டிய ஆளு எனக் கூறி, நான் அவ்வாறு அவர்களை சமாதானம் செய்து வைத்திருக்கிறேன். உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என சொல்லி வைத்திருக்கிறேன்’ என ஒவ்வொன்றாக பேசுவதற்கு, அவர்களுக்கு இடைத் தரகர்களாக பல பேரை வைத்துள்ளனர். 

 

குறிப்பா அமலாக்கத்துறையில் இதுபோல் இடைத்தரகர்களை வைத்துக்கொண்டு, எதிர்த்தரப்பிடம் பேசி ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிவிடுவது. பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பார்த்து இது நமக்கு தெரியவருகிறது. 

 

இதுபோல், எல்லோருக்கும் முதலில் அன்பாக பேசுவது, பிறகு கொஞ்சம் குரலை உயர்த்தி சிறு மிரட்டல் விடுவது, அதற்கடுத்து சமாதானமாக பேசுவோம் என்பார்கள். இதற்கெல்லாம் பணியவில்லை என்றால் அவருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். இப்படிப்பட்ட செயல்கள்தான் நடப்பதாக பலரும் சொல்கிறார்கள். 

 

என்னிடமும் கடந்த மூன்று மாதங்களாக இதுபோல் மூவர் பேசினார்கள். மூன்றாவது முறை ஒருவர் என்னிடம் பேசும்போது, ‘தம்பி எங்கிட்ட இந்த வேலையெல்லாம் வேண்டாம். நான் சரியாக இருக்கிறேன். மேலே இருப்பவர் பார்த்துக்கொள்வார். நான் வெறும் விவசாயம் மட்டும்தான் செய்கிறேன். என்னையே இப்படி மிரட்டுகிறீர்கள் என்றால், இதைத்தானே எல்லாருக்கும் செய்வீர்கள்’ என்றேன். எனவே, என் அனுபவப் பூர்வமாக தெரிந்து இதனை சொல்கிறேன்” என்று தெரிவித்தார். 

 

 

Next Story

நடராஜர் கோவில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி

Published on 15/08/2023 | Edited on 15/08/2023

 

நாட்டின் 77வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அனைத்து இடங்களிலும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் என பல இடங்களில் கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரு தினங்களில் கோவிலின் கிழக்கு கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். இந்த நிலையில் 77 ஆவது சுதந்திர தின நாளில் காலையில் தேசியக்கொடிக்குக் கோவில் தீட்சிதர்கள் கோவில் கருவறையில் பூஜை செய்து மேளதாளம் முழங்க வெள்ளி தாம்பூலத்தில் எடுத்து வந்து 152 அடி உயரமுள்ள கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றினார்கள். இதனைத் தொடர்ந்து அனைவரும் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்த பட்டொளி வீசி பறந்தது கோடி.