உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் இன்று காலமான நிலையில், அவரது இறுதி சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/dfdfdf_6.jpg)
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் (89) உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மோசமானதால் கடந்த மார்ச் 15 ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று ஆனந்த் சிங் உயிரிழந்தார்.
இந்தநிலையில் தனது தந்தை ஆனந்த் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்கப்போவதில்லை என யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். உ.பி.யில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் அதில் கவனம் செலுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தந்தையின் இறப்பையடுத்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் யோகி ஆதித்யநாத்திற்கு தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)