Skip to main content

ஒரே நாளில் 1.30 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை!

Published on 01/09/2021 | Edited on 01/09/2021

 

;

 

இந்தியாவில் கரோனா இரண்டாம் அலையின் தீவிரம் காரணமாக பல ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. இதன் தாக்கம் மெல் குறைந்துவரும் சூழலில், மூன்றாம் அலை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது என்று பல்வேறு நிபுணர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. தினமும் 70 முதல் 80 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1 கோடியைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 1.02 கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தது.

 

இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 1.30 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதைப் போலவே தமிழகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தினசரி 2 முதல் மூன்று லட்சம் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அந்த எண்ணிக்கை 5.72 லட்சத்தைக் கடந்தது. இந்நிலையில் நேற்று புதிய சாதனையாக 5.75 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்