Skip to main content

இந்தியாவில் கரோனா எண்ணிக்கை 17 லட்சத்தை கடந்தது!

Published on 02/08/2020 | Edited on 02/08/2020
hg

 

உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 

 

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்த தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனை தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் உச்சகட்டத்தில் இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723ஆக உயர்ந்துள்ளது.  கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879ஆக உள்ளது. கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403 ஆக அதிகரித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்