பாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்

கடந்த சில நாட்களாக பாலிவுட் நடிகை சன்னி லியோன் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலானது. ஏற்கனவே சன்னி லியோனின் வீடியோக்கள் (புகைபிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வு படம், கொச்சினில் கூட்டம் கூடிய வீடியோ) இணையத்தில் புகழ் பெற்றிருந்தாலும் இந்த வீடியோ சற்று வித்தியாசமானது. படப்பிடிப்பு தளத்தில் ஓய்வு நேரத்தில் அமர்ந்துகொண்டிருந்த சன்னி லியோன் மீது அவரின் நண்பரும் நடிகருமான சன்னி ரஜனி, ஒரு சிறிய ரக பாம்பை அவருக்குத் தெரியாமல் திடீரென்று மேலே போட, அதனைப் பார்த்து அலறியடித்துக்கொண்டு அவரைத் துரத்துகிறார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட அது வைரலானது.

சன்னி லியோன் தன்னை பாம்பின் மூலம் பயமுறுத்திய சன்னி ரஜனியை பழிவாங்கும் வகையில் அடுத்த நாளே, அதாவது கடந்த 26 ஆம் தேதி இரண்டு கேக்குகளை அவரின் பின்பக்கமாகக் கொண்டு சென்று அவரின் முகத்தில் அடிக்க, நண்பர் அதன் பின் சன்னி லியோனை துரத்தினார். இதனை பழிவாங்கும் வீடியோ என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். இரண்டு சன்னிகளும் செய்த இந்த கலாட்டா ட்விட்டரில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஹரிஹரசுதன்