காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கிராமங்கள் தோறும் கருப்பு கொடியுடன் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.
தஞ்சையில் இன்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் ரயில் மறியல் மத்திய அரசு அலுவலகமான எல்.ஐ.சிக்கு பூட்டு, மாணவர்கள் உண்ணாவிரதம் என்று பல போராட்டங்கள் நடந்தன.
அதே போல தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் அம்மையாண்டி பஞ்சநதிபரத்தில் சாலை ஓரம் பந்தல் அமைத்த விவசாயிகள் கலப்பை, மண்வெட்டி, நெல் பயிர்களை வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று விவசாயத்தை அழித்துவிட்டு அரிசியை எங்கிருந்து வாங்குவாய் என்று முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் இதே போன்ற போராட்டங்கள் கிராமங்கள் தோறும் நடக்கும் என்றனர்.