Skip to main content

ட்ரம்ப் மிரட்டல் விடுத்தாரா... ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விவகாரத்தில் நடந்தது என்ன..? - மருத்துவர் எழிலன் பேச்சு!

Published on 10/04/2020 | Edited on 10/04/2020


உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 16 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 150-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் விவகாரத்தில் நடைபெற்ற சச்சரவுகள் தொடர்பாக மருத்துவர் எழிலனிடம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

l



கரோனா தொற்றுக்கு தற்போது பயன்படுத்தப்படும் 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' என்ற மருந்து இந்தியாவில் அதிக அளவு தயாரிக்கப்படுகின்றது. உலக நாடுகள் தற்போது அந்த மாத்திரையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டு வருகின்றன. அமெரிக்காவும் இந்த மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளார்கள். அவர்கள் இந்தியாவிடம் அந்த மருந்தை கேட்ட தொனி தற்போது சர்ச்சையாகியுள்ளது. அவ்வளவு பெரிய வல்லரசான அமெரிக்கா அந்த மருந்தை ஏன் தங்கள் நாட்டில் தயாரிக்கவில்லை, அதன் மூலப்பொருட்கள் சீனாவில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இதில் உண்மை நிலைமை என்ன?

இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வளரும் நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஒன்றாகவே இருக்கிறது. இது மலேரியா காச்சலுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரை. அத்தியாவசிய பட்டியலில் இது இருப்பதால் இதன் விலை கூட குறைவாகத்தான் உள்ளது. இதன் 70 சதவீதம் மூலப்பொருட்கள் சீனாவில் இருந்துதான் இந்தியாவிற்கு வருகின்றது. மீதி 30 சதவீதம்தான் இங்கே உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருள்கள். இந்த இரண்டையும் கலந்து மாத்திரைகளாக கம்பெனிகள் தயாரிக்கிறார்கள்.
 

http://onelink.to/nknapp



சீனாவில் இந்த கரோனா தொற்று அதிகமான சமயத்தில் இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையைக் குறிப்பிட்ட சில நோயாளிக்களுக்கு கொடுத்து சோதித்ததில், பலன் கிடைத்துள்ளது. பெரிய ஆய்வு செய்து எல்லாம் இந்த முடிவுக்கு அவர்கள் வரவில்லை. சாம்பிள் டெஸ்ட் மட்டும் செய்து பார்த்துவிட்டு அவர்கள் இந்த முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள். அதே போன்றே பிரான்ஸிலும் இதே மாதிரி சோதனை செய்துபார்த்துவிட்டு இந்த மாத்திரை, இதனை ஓரளவு தடுத்தும் என்ற முடிவுக்கு வருகதிறார்கள். இதைபோலவே அமெரிக்காவை சேர்ந்த மருத்துவர் ஒருவரும் நோயாளிகளுக்கு கொடுத்து சோதனை செய்ததில் அவரும் இந்த முடிவுக்கு வருகிறார்கள். 

அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதுகிறார். ட்ரம்ப் இந்த மாத்திரையை இறைவனால் கொடுக்கப்பட்ட ஒன்றை போல் பிடித்துக்கொண்டார். கரோனா தொற்றுக்கான அடிப்படை ஆய்வைச் செய்யாமல் இந்த மாத்திரை தான் தீர்வு போல அந்நாட்டு மக்களிடம் தொடர்ந்து ட்ரம்ப் பேசி வருகிறார். அவர் பத்தரிகையாளர் சந்திப்பில் இதைப் பற்றி பேசும்போது ஒரு நிருபர் அவர்கள் இந்தியா கொடுக்கவில்லை என்றால் ரிட்டாலியேட் செய்வீர்களா என்ற கேள்வி எழுப்ப, ட்ரம்ப் ஆமாம் செய்வோம் என்கிறார். இந்திய அரசால் ஏப்ரல் 5-ஆம் தேதி ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்ட இந்த மாத்திரை, இந்த பேச்சுக்கு அப்புறம் தடை விலக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படும் என்று அறிவிக்கப்படுகிறது. மனிதாபிமான அடிப்படையில் என்று சொல்கிற நீங்கள் ஏன் தடைவிதித்துவிட்டு அப்புறம் எதற்காக அதனை விலக்கிக்கொண்டீர்கள். இரண்டே நாளில் மனிதாபிமானம் வந்துவிட்டதா? ஆச்சரியமாக உள்ளது என முடித்தார்.