Skip to main content

'நான் சங்கியா..?" கோபத்தில் காலணியை கழட்டிய சீமான்!

Published on 16/12/2021 | Edited on 16/12/2021

 

fdg


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சுக்கள் எப்போதும் தடாலடி கருத்துகளைக் கொண்டதாகவே இதுவரை இருந்திருக்கிறது. அதை மீண்டும் உறுதி செய்யும் வகையில் தற்போது சென்னையில் நடைபெற்ற விழா ஒன்றில் அவர் பேசியிருப்பது அக்கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், ஆளுங்கட்சியினருக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், தன்னைக் குறிப்பிட்ட கட்சியினர் சங்கி என்று அழைப்பதற்கும், பி டீம் கட்சி என்று கூறுவதற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசியதாவது, "அரசுக்கு எதிராக அவதூறாகப் பேசியதாக நம் தம்பிகளைத் தற்போது கைது செய்துவருகிறார்கள். இந்தக் கைதில் கூட நேர்மையான நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? துரைமுருகனை கைது செய்தார்கள், எவனும் வாய் திறக்கவில்லை.

 

4 மாதம் பிணை கூட தராமல் இருந்தார்கள். அரசு தரப்பு வழக்கறிஞர் ஒவ்வொன்றாகக் குறைகூறி நீதிமன்றத்தில் வாதம் செய்தார். ஆனால் இது, மாரிதாஸை கைது செய்தபோது எங்கே போனது? 4 நாட்களிலேயே வழக்கை உடைத்து வெளியே வந்தாரே, அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்த்து வாய் திறக்கவில்லையே. இதிலிருந்து தெரியவில்லையா, யார் உண்மையான சங்கி என்று. நானாடா சங்கி? சங்கிப் பசங்களா, யாரைப் பார்த்து யார் சங்கி என்று சொல்றீங்க? (காலணியைக் கையில் எடுத்து காட்டுகிறார்). அமைதியாக இருக்கும் என்னை வெறிபிடிக்க வைத்துவிடாதீர்கள். நானும் கோபத்தை அடக்கி, அடக்கி, அடக்கி எவ்வளவோ முயன்று பார்க்கிறேன், என்னால் முடியவில்லை. என் மனைவி என்னை மறுபடியும் கராத்தே கிளாஸ்க்கு போகச் சொல்கிறாள். 

 

என்னைப் பற்றி பேசவில்லை என்றால் இவர்களுக்கு எந்த வீட்டிலும் கஞ்சி ஊத்த மாட்டார்கள். அதற்காக எதையாவது எப்போதும் உளறிக்கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நான் புலி என்பதால் உங்களை எல்லாம் ஒரே அடியாகப் போட வேண்டும். ஆனால் உங்களை எல்லாம் அடித்துப் பார்க்கவா என்னைப் பெத்து வளர்த்திருக்கிறார்கள். என்னைத் திட்டி பிழைப்பு ஓட்ட வேண்டும் என்றால் செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள். எனக்கு இது பழகிவிட்டது. தம்பிகள் எல்லாம் என்னைப் பற்றி அடுத்தவர்கள் தவறாகப் பேசினால் கொதிக்கிறார்கள். ஆரம்பத்தில் எனக்கும் அந்தக் கொதிப்பு இருந்தது. இத்தனை ஆண்டுகளில் அது வெகுவாக குறைந்துவிட்டது.

 

உங்களுக்கும் இன்னும் பத்து ஆண்டுகளில் அது புரிய ஆரம்பித்துவிடும். நீங்களே அப்போது இதைக் கடந்து போவீர்கள். அண்ணனைத் திட்டிவிட்டார்கள் என்று கோவப்பட்டு 400 பேர் கூட பார்க்காத வீடியோவை 40 ஆயிரம் பேர் பார்க்க வைக்கிறதும் நீங்கள்தான்! எதுவாக இருந்தாலும் என் முகம் இருக்கிறது. நான் அந்த செய்தியிலேயே இல்லையே, என் படத்தை எதற்கு வைத்தார்கள் என்ற குழப்பம் நம்மை ஆட்டிப் பிடிக்கிறது. விஷத்திலும் போடுறான், ரசத்திலும் என் போட்டோவ போடுறான், ஒரு மண்ணும் புரிய மாட்டேங்கிறது. தொலைந்து போறான் என்று விட்டுவிட வேண்டியதுதான்" என்றார்.

 

 

 

Next Story

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; நா.த.க. வேட்பாளர் அறிவிப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Vikravandi by-election; N.t.K. Candidate announced

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவாவை வேட்பாளராக அக்கட்சி தலைமை அறிவித்திருந்தது. இவர் திமுகவின் விவசாய அணி செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜூலை 10 அன்று நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக அபிநயா (முதுகலை ஓமியோபதி மருத்துவம்) போட்டியிடவிருக்கிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“தம்பிகள் இருவருக்கும் பாராட்டுகள்...” - கமல்ஹாசன் வாழ்த்து!

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
"Congratulations to both brothers..." - Kamal Haasan Congratulations

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இன்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றுள்ளது. 12 மக்களவைத் தொகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறி உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில் நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை எடுத்துள்ளதால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத வாக்குகள் பெற்றிருந்ததும், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியினர் கேட்ட  'விவசாயி சின்னம்' கொடுக்காமல் 'மைக்' சின்னம் ஒதுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

"Congratulations to both brothers..." - Kamal Haasan Congratulations

அதேபோல் இரண்டு தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விசிக இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றது. இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று 2 சதவிகிதத்திற்கு அதிக வாக்குகள் பெற்றுள்ளதால் விசிக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. கட்சி ஆரம்பித்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேசம் என்றால் மக்கள். தேர்தலென்பது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான களம். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் என் அன்பிற்கினிய தம்பிகள் இருவர் படைத்திருக்கும் சாதனை எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

"Congratulations to both brothers..." - Kamal Haasan Congratulations

சமத்துவ சமுதாயம் படைக்க சமரசமின்றி போராடி வரும் தம்பி திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வென்று மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றுள்ளது. சிறுத்தைகளின் கால் நூற்றாண்டு கால தேர்தல் அரசியலில் இது ஒரு மைல் கல் சாதனை. புதிய சின்னத்தோடு தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையிலும் தீரத்துடன் களம் கண்ட தம்பி சீமானின் நாம் தமிழர் கட்சி 8.19% வாக்குகளை எட்டிப் பிடித்து மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பெற்றிருப்பது தமிழக அரசியலில் புதிய திருப்புமுனை.

அரசியல் உங்களைத் தாக்கும் முன், உங்கள் தாக்கம் அரசியலில் இருக்கட்டுமென இளையோரை தொடர்ந்து வலியுறுத்துகிறவன் நான். ஜனநாயகம் வலுப்பெற அரசியலில் புதிய குரல்களும், இளைஞர்களின் பங்களிப்பும் அதிகரித்தே ஆகவேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்று மாநிலக் கட்சி அங்கீகாரம் பெற்ற தம்பிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.