/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/449_7.jpg)
'கே.ஜி.எஃப்' படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான யஷ், 'கே.ஜி.எஃப் 2'-க்குப் பிறகு அடுத்த படத்திற்கு 1 வருடத்திற்கு மேலாக காலம் எடுத்து கொண்டார். இவரின் அடுத்த பட அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே பாலிவுட்டில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் ராவணனாக நடிக்க கமிட்டாகியுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.
இதில் கீது மோகன் தாஸ் படத்தை கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க ‘டாக்சிக்’ என்ற தலைப்பில் உருவாகிறது. இது தொடர்பான அறிவிப்பு வீடியோ பலரது கவனத்தை ஈர்த்திருந்தது. அதில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம், கோவாவில் போதைப் பொருள் நடத்தும் ஒரு கும்பலை மையப்படுத்தி ஒரு ஆக்ஷன் நிறைந்த படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இப்படத்தில் பாலிவுட் முன்னணி நடிகை கரீனா கபூர், யஷின் அக்கா கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டானதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் கரீனா கபூர் தற்போது கால்ஷீட் பிரச்சணை காரணமாக விலகியுள்ளதாகவும் அதற்கு பதில் நயன்தாராவிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘டியர் ஸ்டூடண்ஸ்’ என்ற படத்திலும் நடிக்கிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)