The wife who burned her husband bullied her for extramarital affair

Advertisment

உத்தரப் பிரதேசம் மாநிலம், பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனன் ஜைதி. இவரது மனைவி மெஹர் ஜஹான். இந்த நிலையில், மெஹர் ஜஹானுக்கும் வேறு ஒரு நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது.

இதைத்தெரிந்துகொண்ட கணவன் மனன் ஜைதி, தனது மனைவியிடம், அந்த உறவை கைவிடுமாறு கண்டித்து தட்டிக் கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த மெஹர் ஜஹான், போதை கலந்த பாலை தனது கணவருக்கு கொடுத்த மயக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மேலும், தனது கணவனின் கை கால்களை கட்டிலில் கட்டி போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் பலமுறை தொடர்ந்து நடந்து வந்துள்ளது.

இந்தக் கொடூரத்தை வெளி உலகிற்கு கொண்டு வர நினைத்த மனன் ஜைதி, முன்னெச்சரிக்கையாக தனது அறையில் கேமரா ஒன்றை வாங்கி பொறுத்தியுள்ளார். அதன்படி, வழக்கம்போல் கணவனை மனைவி கட்டி போட்டு கொடுமைப்படுத்திய சம்பவம் அந்தக் கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisment

அந்த வீடியோவில், ‘கணவனின் கை கால்களை கட்டிலில் கட்டி போட்டு மனைவி மெஹர் ஜஹான் அடித்து கொடுமைபடுத்துகிறார். மேலும், சிகிரெட்டால் அவரது உடம்பை சுட்டும், கத்தியை கொண்டு கணவனின் ஆண் உறுப்பை காயப்படுத்தியும் இருக்கிறார். இதில் வலி தாங்க முடியாத மனன் ஜைதி அலறி துடிக்கிறார்’ என்பதுடன் வீடியோ முடிவடைகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளை, போலீசாரிடம் ஒப்படைத்த மனன் ஜைதி இது குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில், மெஹர் ஜஹான் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, தாக்குதல், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவனை அடித்து துன்புறுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.