'A loss to the medical world'-Tamil Chief Minister mourns

இந்திய கடல்சார் தகவல் மையம் நேற்று முன்தினம் (04.05.2024) பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது. அதில், “காற்றின் போக்கு காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கடல் கொந்தளிப்புடனும், கடல் அலை சீற்றத்துடனும் இருக்கும். கல்லக்கடல் எனும் நிகழ்வு 4 மற்றும் 5 ஆம் தேதி (05.04.2024) ஏற்படும். கடல் அலை சீற்றத்துடன் இருக்கும். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

Advertisment

இதனையொட்டி கடல் சீற்றம் காரணமாக கன்னியாகுமரியில் உள்ள கடலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. கடலில் இருந்து எழும் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனையொட்டி கடலில் யாரும் குளிக்கக் கூடாது என ஒலிபெருக்கி மூலம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்த மாணவர்கள் போலீசாரின் எச்சரிக்கையையும் மீறி கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் அருகே கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது கடலில் குளித்தபோது 6 பேரை அலை இழுத்துச் சென்றது. இதில் 5 பேர் கடலில் மூழ்கி பலியாகினர். ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று இதேபோல் கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்தில் தந்தை மற்றும் மகள் 7 வயது மகளை ராட்சத கடல் அலைகள் இழுத்துச் சென்ற நிலையில் தந்தை மற்றும் மீட்கப்பட்டார். அதன் பிறகு சிறுமி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்தச் சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

'A loss to the medical world'-Tamil Chief Minister mourns

இந்நிலையில் கடலில் மூழ்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். 'தன் பிள்ளைகளை இழந்து வாடும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். மருத்துவ மாணவர்களின் உயிரிழப்பு உண்மையிலேயே மருத்துவ உலகிற்கு பேரிழப்பு. தகவல் கிடைத்ததும் ஆட்சியர்களைத்தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினேன். பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றுத் தரப்படும். காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்க உத்தரவிட்டுள்ளேன்' எனத்தெரிவித்துள்ளார்.