இயக்குநர் சுகுமார் அழகர்சாமி இயக்கத்தில்சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வர்ணாஸ்ரமம்’. இப்படத்தில்ராமகிருஷ்ணன், 'பிக்பாஸ்'அமீர், சிந்தியா உள்ளிட்ட பலர் நடிக்கதீபன் சக்கரவர்த்தி இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் முன்னதாக வெளியான நிலையில் அதில்,சாதிய ஆணவப்படுகொலை சம்பந்தப்பட்ட பிரச்சனையைபடக்குழு கையில் எடுத்துள்ளது போல் தெரிகிறது.
சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நடைபெற்றதைஅடுத்துதற்போது 'கம்பு 30' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இதில்கர்ணன்,சார்பட்டா பரம்பரை, விக்ரம்போன்ற படங்களில் பின்னணியில் இசைத்த ‘பேசு ஜேகே’ கலைக்குழுவினர் நேரடியாக ஆடி இசைத்திருக்கிறார்கள். ‘கம்பு முப்பதுகயிறு முப்பது’என்று தொடங்குகிற இப்பாடல் முழுக்க முழுக்க பறையிசை தாளக்கட்டுகள் குறித்து பேசுகிறது.அதனை வெளிநாட்டவர் ஆவணப்படுத்துவது போல் உள்ளது. இப்பாடலை இயக்குநர் சுகுமார் அழகர்சாமியும், பேசு ஜேகே ஜெயக்குமார் இணைந்து எழுதியுள்ளார்கள்.