
ஐகான் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’. இப்படத்தில் அமர் கீத்.எஸ் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவர் சேரன் பாண்டியன் பட இசையமைப்பாளர் சௌந்தர்யன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தின் இசையமைப்பாளர் அமர் கீத்.எஸ், தனது பின்னணி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “நான் முதல் வகுப்பு படிக்கும் போதே இசையில் ஆர்வம் வந்துவிட்டது. கீ-போர்டு வாசிக்க கற்று கொண்டேன். பின்பு பத்தாவது படிக்கும் போது தாமாகவே இசை சம்பந்தமான மென்பொருளை படித்து இசையமைக்க தொடங்கினேன். பின்பு காலேஜில் ஒலி சம்பந்தமான படிப்பை படித்து முடித்தேன். அதன் பிறகு குறும்படங்கள், வெப் தொடர்கள் மற்றும் ஆவணப்படங்களுக்கு இசையமைத்தேன். இப்போது இந்த படத்துக்கு இசையமைத்துள்ளேன். இதுதான் என்னுடைய முதல் படம்” என்றார்.