Surya 46 started off on a good note with a pooja

Advertisment

சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 1ஆம் தேதி வெளியான படம் ‘ரெட்ரோ’. ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருந்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. இருப்பினும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்துள்ளது. இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று உலகம் முழுவதும் ரூ.235 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தின் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சூர்யா 46 படத்தின் பணிகள் இனிதே பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை வாத்தி, லக்கிபாஸ்கர் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இயைசமைக்கும் இந்த படத்தில் மமிதா பைஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். சித்தாரா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த படத்தின் பணிகளை விரைந்து முடித்துவிட்டு இந்தாண்டு இறுதிக்குள் தொடங்கும் வெற்றிமாறனின் வாடிவாசல் படப்பிடிப்பில் சூர்யா கலந்துகொள்ளவிருக்கிறாராம்.