Skip to main content

ரஜினியை சந்திக்க ஆசை; நிறைவேறாமலே மறைந்த நடிகர்!

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
 thillu mullu movie actor chandrasekaran passed away

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே இன்றளவும் கொண்டாடப்படும் படங்களில் ஒன்று ‘தில்லுமுல்லு’. அதிரடி நாயகனாக வலம் வந்த ரஜினிகாந்த்தை முழுக்க முழுக்க காமெடி நாயகனாக இந்த படத்தில் காணலாம். இரண்டு கெட்டப்புகளில் வித்தியாசம் காட்டி நடித்திருப்பார். 

‘தில்லு முல்லு’ படத்தின் மூலம் நடித்து பிரபலமானவர் சந்திரசேகரன். படத்தில் இரட்டை வேடமிட்டு ஏமாற்றும் ரஜினியை கண்டறிந்து மிரட்டி பணம் பறிக்கும் சிறுவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 59.

 thillu mullu movie actor chandrasekaran passed away

இவரது இறப்பு தகவல்களை ஊடகங்களிடையே பகிர்ந்து கொண்ட அவரது மகன் கார்த்திக் பேசியதாவது “நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க வேண்டும் என்பது அப்பாவின் நீண்டகால ஆசையாக இருந்தது, அதற்கான முயற்சியில் தான் இருந்தோம், அதற்குள் அப்பாவிற்கு உடல்நலம் குன்றி இறந்து விட்டார், அப்பாவின் ஆசை நிறைவேறாமலேயே போனது” என்றார்.

சார்ந்த செய்திகள்