karu palaniappan complaint against pala karuppaiah

இயக்குநர் மற்றும் நடிகரான கரு.பழனியப்பன், தற்போது அரசியலில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் தந்தையின் சகோதரர் மற்றும் மூத்த அரசியல்வாதி பழ.கருப்பையா மீது சாதிய வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட காவல் கண்காளிப்பரிடம் அவர் கொடுத்த புகாரில், மாற்று சமூகத்தில் நான் காதலித்து திருமணம் செய்ய முயன்ற போது அப்படி பண்ணக்கூடாது என பழ.கருப்பையா என்னிடம் சொன்னர். அதையும் மீறி நான் திருமணம் செய்ததால் பழ.கருப்பையா, என்னை கடந்த 21 வருஷங்களாக சாதிய வன்கொடுமை செய்து வருகிறார். என்னை குடும்பத்தில் இருந்து தனிமைப்படுத்தி ஒதுக்கி வைக்க நினைக்கிறார்.

karu palaniappan complaint against pala karuppaiah

Advertisment

அவரது விருப்பத்திற்கு மாறாக காதல் திருமணம் செய்து கொண்டதால் என்னை தனிமைப்படுத்தி வீண் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது தான் அவரது நோக்கம். பழ. கருப்பையாவிடம் இருந்து என்னை பாதுகாக்கவும் அதை மீறியும் அவரால் எனக்கு எதாவது நடந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தனது புகாரில் கரு. பழனியப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.