Skip to main content

'இது என்ன புதினின் தலைக்கு வந்த சோதனை...'- பிரான்ஸ் எடுத்த அதிரடி முடிவு!

Published on 04/03/2022 | Edited on 05/03/2022

 

'What a test for Putin's head ...' - a sudden decision by France!

 

ஒரு வாரமாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தொடர் போர் சூழல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தொடர் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

 

'What a test for Putin's head ...' - a sudden decision by France!

 

'What a test for Putin's head ...' - a sudden decision by France!

 

இந்நிலையில் பாரிஸில் உள்ள பழமையான அருங்காட்சியகத்தில் இருந்து ரஷ்ய அதிபர் புதினின் மெழுகுசிலை அகற்றப்பட்டுள்ளது. பிரான்சின் தலைநகரான பாரிஸில் ஜீன் ஆற்றங்கரை ஓரம் 'க்ரேவின்' என்ற அருங்காட்சியகம் 1782 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் பழமையான அருங்காட்சியகமாகும். இங்கு தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் மெழுகு சிலைகள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் சிலையை காட்சிப்படுத்த தாங்கள் விரும்பவில்லை என 'க்ரேவின்' அருங்காட்சியக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதினின் தத்ரூப மெழுகுசிலை தலைவேறு உடல் வேறாக பிரிக்கப்பட்டு அகற்றப்படும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'இது என்ன புதினின் தலைக்கு வந்த சோதனை' என சமூகவலைத்தளங்கள் வாயிலாக சிலர் கலாய்த்தும் வருகின்றனர்.    

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு; 70 பேர் உயிரிழப்பு

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Indiscriminate shooting; 70 people lost their lives

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு  பொறுப்பேற்றுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கில் எதிர்பாராதவிதமாக பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு உலக தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தின் வாயிலாக இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 'இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கு இந்திய அரசும், இந்திய மக்களும் துணை நிற்போம்' எனத் தெரிவித்துள்ளார்.