chi

Advertisment

சீனாவில் ஹெபே மாகாணத்தில் இயங்கி வரும் இரசாயன தொழிற்சாலைக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். தொழிற்சாலைக்கான இரசாயனம் ஏற்றி வந்த லாரி அந்த தொழிற்சாலை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, அப்பொழுது திடீரென பெரும் சத்தத்துடன் அந்த லாரி வெடித்தது. இதனால் அதற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேலும் சில லாரிகளும், கார்களும் வெடித்து சிதறின. இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 22 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பின் அந்த இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.