/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/96_41.jpg)
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடந்து வருகிறது.
காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் கர்நாடகாவில் சிவராஜ்குமார், பிரகாஷ் ராஜ், கன்னட நடிகர் யஷ் உள்ளிட்ட பலரும்வாக்களித்தனர்.
இதனிடையே மலையாள நடிகை பார்வதி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார். அதுசமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் அவரது ஸ்டோரிசில், “வெறுப்புக்கு எதிராக. வெறுப்பை ஏற்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். உங்கள் சக மக்களை ஒடுக்குவதற்கும் துன்புறுத்துவதற்கும் மதத்தை ஆயுதமாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள். பொய்கள் மற்றும் கோழைத்தனத்திற்கு எதிராக, 'விகாஸ்' என்று முகமூடி அணிந்தவர்களுக்கு எதிராக வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)