Skip to main content

“சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளரப் பாடுபடுவோம்” - முதல்வர்

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
We will strive to develop a society where self respect and equality flourish CM

தமிழ்நாடு அரசின் சார்பில் சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 165-வது பிறந்தநாள் இன்று (18.2.2024) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ம. சிங்காரவேலரின் உருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரின் உருவப்படத்திற்கு தமிழக அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன், துணை மேயர் மு. மகேஷ்குமார், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் இல. சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “தமிழ்ப் பற்றும் பொதுவுடைமைக் கொள்கையும் கொண்டு உழைக்கும் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 165-ஆவது பிறந்தநாள் இன்று. ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்று தமிழ் மண்ணில் விளைந்த புரட்சியாளரான அவரது நினைவுகளைப் போற்றி, அவர் விரும்பிய சுயமரியாதையும் சமதர்மமும் தழைத்தோங்கும் சமூகம் வளரப் பாடுபடுவோம்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்