Skip to main content

புதுச்சேரி அருகே டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்க முயற்சி!

Published on 23/08/2017 | Edited on 23/08/2017
புதுச்சேரி அருகே டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்க முயற்சி!

அதிமுக-வில் பிளவுபட்டுக் கிடந்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ், இரு அணிகளும் இணைந்த நிலையில்,  டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தங்கள் ஆதரவு இல்லையென நேற்று ஆளுநரிடம் கடிதமாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து அதிமுகவில் மீண்டும் குழப்ப நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி உப்பளம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அன்பழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று காலை டி.டி.வி.தினகரன் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து டிடிவி தினகரனை கண்டித்து அவருக்கு எதிராக கோஷகங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.   

சார்ந்த செய்திகள்