Skip to main content

"அறிவிக்கப்பட வேண்டிய நோய் கருப்பு பூஞ்சை" - மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!

Published on 20/05/2021 | Edited on 20/05/2021

 

tamilnadu health secretary radhakrishnan pressmeet at chennai

 

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "கருப்பு பூஞ்சைப் பாதிப்பைக் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. கரோனாவுக்குப் பின்னர் கருப்பு பூஞ்சை நோய் உருவானதாகக் கூறுவது தவறானது. கருப்பு பூஞ்சை என்ற மியூகார்மைகோசீஸ் நோயைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்; குணப்படுத்தக் கூடியதுதான். 

 

தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள 9 பேரும் நலமுடன் இருக்கின்றனர். கருப்பு பூஞ்சைப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாகப் பின்பற்றினால் மட்டுமே கரோனா பரவல் குறையும். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று குறைகிறது" எனத் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

ராங்கி தொழில்நுட்பக் குழுவைப் பாராட்டித் தள்ளிய திரிஷா

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Trisha praise Raangi technical team

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு திரிஷாவின் சினிமா கிராஃப் மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தந்து வெளியாக இருக்கிற ராங்கி திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை திரிஷா பேசியதாவது..

 

“ஒரு நடிகையாக நான் நடித்து முடித்து போய்விடுவேன். அதற்குப் பிறகு இந்தப் படம் வெளிவர உழைப்பது தொழில்நுட்பக் குழு தான். அவர்களுக்கு என் வாழ்த்துகள். என்னைப் பொறுத்தவரை இவர்கள் தான் ஒரு படம் சிறப்பாக அமைய முக்கியக் காரணமாகும். படத்தின் இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் இவர்களை வேலை வாங்குகிற இயக்குநர் ஆகியோரின் பங்களிப்பு மிக மிக முக்கியம்.

 

படத்தின் ஸ்டண்ட் மாஸ்டருக்கு நன்றி. நீங்க வாங்க, நாம பார்த்துக்கலாம் என்று தைரியமாக களம் இறக்கியவர் அவர்தான். ஸ்பாட்ல போயி தான் ரிகர்சலே பண்ணுவோம். ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தராமல் ரொம்ப ஜாலியாக இருந்ததற்கு காரணமே படப்பிடிப்பின் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்தவர்கள் தான். இந்த நிகழ்விற்கு பல உதவி இயக்குநர்கள் வரல. ஆனால், பின்னால் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு அர்ப்பணிப்பு நிறைந்தது.” என்றெல்லாம் பாராட்டினார்.