kushbu struggle in kelampakkam

Advertisment

பெண்கள்தொடர்பாக மனுநீதியில்கூறிய சில கருத்துகளை, சமூக ஊடகம் வாயிலாக திருமாவளவன் சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். இதற்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் அவரை கண்டித்து, குஷ்பு தலைமையில் இன்று போராட்டம் நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை தடையை மீறி போராட்டம் நடத்த சிதம்பரம் நோக்கி காரில் சென்ற நடிகை குஷ்புமற்றும் அவருடன் சென்றவர்களை முட்டுக்காடு அருகே ஏ.எஸ்.பிசுந்தரவதனன் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட குஷ்பு மற்றும் அவருடன் சென்றவர்கள் கேளம்பாக்கம் அருகே தையூர் எனும் பகுதியில் உள்ள சர்தன் ரெஸ்டாரண்டில் அடைக்கப்பட்டனர்.அப்பொழுது ரெஸ்டாரன்ட் வளாகத்திலேயே அமர்ந்து விசிக தலைவர் திருமாவளவனுக்கு கண்டனங்களை தெரிவித்து குஷ்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அதைஅவரது கட்சியினரே அவர் பேசியதை வீடியோவாக பதிவு செய்தனர்.

Advertisment

அப்பொழுது குஷ்பு பேசுகையில், இதைப்பற்றி திருமாவளவன் அண்ணன் பேச வேண்டும் என்று அவசியமே கிடையாது. அண்ணன் என சொல்கிறேனென்றால் அவ்வளவு மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறோம். எப்போது நீங்கள் பெண்களுக்கு எதிராக பேசுனீர்களோ அப்பொழுது அந்த மரியாதை உங்களுக்கு கொடுக்க முடியாது. இன்னைக்கு நீங்க... என்று பேச்சை தொடர,திடீரென வீடியோ எடுத்துக் கொண்டிருந்தவர் ‘ரிப்பீட்’ எனக் கூறினார்.அதற்கு குஷ்பு''ஏம்மா ஒரு ஃப்ளோவில்போய்க் கொண்டிருக்கும்போது ரிப்பீடெல்லாம் சொல்லாத, எங்கிருந்து வரணும்'' எனக் கேட்டார். ஃபர்ஸ்ட்ல இருந்து எனவீடியோ எடுத்துக் கொண்டிருந்த பெண்கூற, ''கொன்னுடுவேன்உன்ன'' என்றவர் பின்னர் திரும்பவும் பேச்சைத் தொடங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.